சென்னை: மே முதல் வாரத்தில், பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் என, அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறினார்.
வரும் கல்வியாண்டுக்கான பொறியியல் சேர்க்கை குறித்து, பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளுடன், மன்னர் ஜவகர், அண்ணா பல்கலையில், நேற்று ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்திற்குப் பின், நிருபர்களிடம் அவர் கூறும்போது, "மே முதல் வாரத்தில், பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் தேதி குறித்து, பின்னர் அறிவிக்கப்படும். முதலில் 2 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்படும்'' என்றார்.
இதற்கிடையே, தனியார் சுயநிதி பொறியியில் கல்லூரிகளில், கல்விக் கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்தி விட்டதாகத் தகவல்கள் வெளியானதை, தொழிற்கல்வி படிப்புகளுக்கான கல்வி கட்டணக்குழுத் தலைவர் பாலசுப்ரமணியன் மறுத்தார்.
அவர் கூறுகையில், "பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினரிடமும், கல்விக் கட்டணம் தொடர்பாக, கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகின்றன. அடுத்த மாதம் 12ம் தேதி வரை, கருத்துக்கள் கேட்ட பிறகே, புதிய கல்விக் கட்டணம் குறித்து, இறுதி முடிவு எடுக்கப்படும்'' என்றார்.-DINAVIDIYAL!