மெக்சிகோ புறநகர் பகுதியில் அமைந்துள்ள எரிமலையொன்று வெடித்ததில் அப்பகுதியிலுள்ள மக்கள் முழுவதும் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியின் புறநகர் பகுதியான ஷாலிட் சிந்தியா என்ற கிராமத்திற்கருகே இந்த எரிமலை அமைந்துள்ளது.
நேற்று அதிகாலைப் பொழுதில் இந்த எரிமலை வெடிக்கத் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து ஷாலிட் சிந்தியா பகுதி மக்கள் அச்சம் அடைந்ததையடுத்து மெக்சிகோ அரசு அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.
மெக்சிகோ அரசு 50 பேருந்துகள் மூலம் அக்கிராமத்திலிருந்த 2,600 நபர்களையும் 7 மைல் தொலைவிற்கு அப்பால் உள்ள ஒரு கிராமத்தில் தங்க வைத்துள்ளது.
எரிமலை வெடிப்பு காரணமாக அப்பகுதியில் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.-DINAVIDIYAL!