HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Saturday, 21 April 2012

வீட்டுப்பாடம் எழுதாததால் 6 வயது மகனை உயிருடன் மண்ணுக்குள் புதைத்து கொலை

சீனாவில் வீட்டுப்பாடம்(Homework) எழுதாத 6 வயது மகனை அடித்து உதைத்து உயிருடன் மண்ணில் புதைத்து, அவரது தந்தை கொலை செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவின் யுன்னான் மாகாணத்தைச் சேர்ந்தவர் லீ. இவரது ஆறு வயது மகன் பள்ளியிலிருந்து வழக்கம் போல் வீடு திரும்பினான்.
பின்னர் வீட்டுப்பாடம் சரியாக எழுதவில்லை என்பதனை அறிந்த லீ மகனை அழைத்து கேட்டார். இதற்கு அவன் சரியாக பதி்ல் சொல்லாதததால் மகன் என்றும் பாராமல் நெஞ்சில் எட்டி உதைத்து, குண்டுகட்டாக தூக்கி சுவற்றில் அடித்து வீசி எறிந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த மகன், மயங்கி விழுந்தான்.
பெற்ற மகனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு பதிலாக அங்குள்ள மலைப்பகுதிக்கு தூக்கிச்சென்று உயிருடன் மண்ணில் புதைத்து கொலை செய்தார்.
அப்போது மகனைத்தேடி வந்த சக மாணவர்கள் இதனை பார்த்து விட்டதால் அவர்களிடம் வெளியே சொன்னால் உங்களையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தெரியவரே உடனடியாக லீயை கைது செய்தனர். புதைக்கப்பட்ட 6 வயது மகனை தோண்டி வெளியே எடுத்து பிரேத பரி‌சோதனைக்கு அனுப்பிவைத்ததாக யுனான் என்ற இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
-DINAVIDIYAL!