HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Sunday, 22 April 2012

பில்லா-2 படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் அஜித் பிறந்தநாளில்

அஜித் பிறந்தநாளில் அவரது பில்லா-2 படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித்தின் பில்லா பார்ட் 1 படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக உருவாகி இருக்கும் படம் பில்லா-2. இப்படத்தில் அஜித் எப்படி பில்லாவாக மாறினார் என்பது படத்தின் கதை. படத்தில் அஜித் ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டனும், இன்னொரு முக்கிய ரோலில் புரூனா அப்துல்லாவும் நடித்துள்ளனர். இப்படத்தின் சூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்‌க்கு தயாராகி வருகிறது.
ஆரம்பத்தில் இப்படத்தினை அஜித் பிறந்தநாளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். ஆனால் படப்பிடிப்பு முடிய காலதாமதம் ஆகிவிட்டதால் அது முடியாமல் போய்விட்டது. இந்நிலையில் படத்தின் ஆடியோவையாவது அவரது பிறந்தநாளான மே 1ம் தேதி வெளியிட திட்டமிட்டு வருகின்றனர் படக்குழுவினர். அதற்கான வேலைகளும் மும்முரமாக நடந்து வருகிறது.
சமீபத்தில் வெளியான பில்லா-2 படத்தின் டிரைலர் தொகுப்பும் நல்ல வரவேற்பை பெற்றது. படத்திற்கான எதிர்பார்ப்பும் கூடியிருக்கிறது. இதனால் முழு டிரைலரையும் இன்னும் கூடுதலாக மெருகேற்றி வருகின்றனர். மேலும் ஆடியோ விழாவிலேயே இந்த டிரைலரையும் வெளியிட திட்டமிட்டு வருகின்றனர்.
-DINAVIDIYAL!