HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Thursday, 26 April 2012

நீதிமன்ற அவமதிப்பு: பாகிஸ்தான் பிரதமர் கிலானிக்கு '30 வினாடிகள்' சிறை தண்டனை!

இஸ்லாமாபாத்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் கிலானி குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு அளித்துள்ளது. இருப்பினும் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கவில்லை. அதே சமயம் நீதிபதிகள் கோர்ட் அறையிலிருந்து செல்லும் வரை அவர் கோர்ட்டில் நின்றிருக்க வேண்டும் என்ற அடையாள தண்டனை அளிக்கப்பட்டது. குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதால் எந்த நேரத்திலும் அவர் பதவி விலகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

வழக்கு என்ன?

பாகிஸ்தான் அதிபர் சர்தாரிக்கு எதிரான ஊழல் வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த சுவிஸ் அரசாங்கத்துக்கு கடிதம் எழுதுமாறு கிலானிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் கிலானி அத்தகைய உத்தரவை பிறப்பிக்கவில்லை.

இதனால் அவர் மீது உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி நசிர் உல் முல்க் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்து இன்று தீர்ப்பளித்தது.

குற்றவாளி- 30 வினாடிகள் அடையாள தண்டனை

இந்த வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தாததால் கிலானி குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இருப்பினும் அவருக்கு சிறைத் தண்டனை ஏதும் விதிக்கப்படவில்லை.

ஆனால் நீதிபதிகள் அறையை விட்டு வெளியேறும் வரை அவர் 30 வினாடிகள் நின்றிருக்க வேண்டும் என்று அடையாள தண்டனையை நீதிபதிகள் விதித்தனர்.

உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று கூறப்பட்டுள்ள நிலையில் பிரதமர் பதவி வகிக்க கிலானி தகுதியற்றவர் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால் அவர் எந்த நேரத்திலும் பதவி விலககக் கூடும் என்று தெரிகிறது.
-DINAVIDIYAL!