HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Thursday, 26 April 2012

அணு குண்டு ஏந்திச் செல்லும் ஷாஹீன்-1 ஏவுகணையை செலுத்தி பாகிஸ்தான் சோதனை

இஸ்லாமாபாத்:  கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 5 ஏவுகணையை இந்தியா சோதனை செய்த ஒரு வாரத்திற்குள் அணு குண்டை ஏந்திக் கொண்டு 750 கி.மீ. வரை பாயும் ஷாஹீன்-1ஏ ஏவுகணையை பாகிஸ்தான் ஏவி சோதனை செய்துள்ளது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 5 ஏவுகணையை இந்தியா கடந்த 19ம் தேதி வெற்றிகரமாக சோதனை செய்தது. இதையடுத்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் வைத்துள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இணைந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் இந்திய நகரகங்களை குறிவைதது தாக்கும் திறன் கொண்ட ஷாஹீன்-1ஏ ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது.

அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் ஷாஹீன்-1ஏ ஏவுகணை 750 கிமீ தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது. ஆனால் அது உண்மையிலேயே எவ்வளவு தூரம் சென்று தாக்கும் என்பது தெரியவில்லை.

ஆனால் அந்த ஏவுகணையால் வடக்கு மற்றும் மேற்கிந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய நகரங்களையும் தாக்க முடியும் என்று கூறப்படுகிறது.

இந்திய பெருங்கடலில் ஏவுகணை சோதனை நடத்தப் போகிறோம் என்று இந்தியாவிடம் அறிவித்துவிட்டு தான் பாகிஸ்தான் இந்த சோதனையை செய்துள்ளது. பாகிஸ்தான் இந்தியாவிடம் அறிவித்துவிட்டு ஏவுகணை சோதனை செய்ததில் மகிழ்ச்சி என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது-DINAVIDIYAL!