HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Thursday, 26 April 2012

அமெரிக்க அதிபர் தேர்தல் ஒபாமாவுக்கு ஆதரவு 50 சதவீதமாக உயர்வு

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறப் போவது யார் என்ற சமீபத்திய கருத்து கணிப்பில் ஒபாமாவின் ஆதரவு அதிகரித்திருப்பது தெரிய வந்தது.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடக்கவுள்ளது. அதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் 2வது முறையாக அதிபர் பராக் ஒபாமா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் மிட் ரோம்னி களமிறங்குவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

அதிபர் வேட்பாளருக்கான கட்சி வாக்கெடுப்பில் அவர் முன்னிலை வகிக்கிறார். அவரது பெயரை குடியரசு கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது. இந்நிலையில், ஒபாமா & ரோம்னி இருவரிடையே மக்களிடம் அதிக ஆதரவு யாருக்கு உள்ளது என்ற கருத்து கணிப்பு கடந்த மாதமே தொடங்கி விட்டது.

முதல் கட்ட கருத்து கணிப்பில் ஒபாமா பின் தங்கியிருந்தார். சிறிய வித்தியாசத்தில் ரோம்னி முந்தினார். இப்போது காலப் டெய்லி என்ற மீடியா சார்பில் பல்வேறு மாநிலங்களில் மாதிரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் ஒபாமாவுக்கு 50 சதவீத ஆதரவு கிடைத்தது. 44 சதவீதம் மட்டுமே ரோம்னி ஆதரவு பெற்றுள்ளார்.

இடைவெளி 6 சதவீதம் என்பது அதிகம் மட்டுமின்றி ஆட்சியில் உள்ள அதிபர் 50 சதவீத மக்கள் ஆதரவை பிடிப்பது அபூர்வம் என்றும் கூறப்படுகிறது.
இப்போதே அனல் பறக்கும் பிரசாரத்தை தொடங்கியுள்ள மிட் ரோம்னி, அதிபர் ஒபாமா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். மான்செஸ்டர் நகரில் நேற்று பேசிய அவர், ‘‘சிறந்த அமெரிக்காவை உருவாக்குவேன். ஒபாமா எல்லா வகையிலும் தோல்வி அடைந்து விட்டார். அவரது அரசு செயலிழந்து கிடக்கிறது’’ என்று கூறினார்.

-DINAVIDIYAL!