HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Thursday, 26 April 2012

காருக்கு ரூ.9 லட்சம் கொடுத்து நம்பர் வாங்கிய மாஜி டிஜிபி ரத்தோர்

பாலியல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட, ஹரியானா மாநில முன்னாள் டிஜிபி ரத்தோர் தனது மனைவிக்கு பரிசாக வழங்கியுள்ள புதிய பென்ஸ் காருக்கு ரூ.9 லட்சம் கொடுத்து பேன்ஸி நம்பர் வாங்கியுள்ளார்.

ஹரியானா மாநில முன்னாள் டிஜிபியாக இருந்தவர் ரத்தோர். கடந்த 1990ம் ஆண்டில் இவர் டிஜிபியாக இருந்தபோது 14 வயதே நிரம்பிய டென்னிஸ் வீராங்கனை ருச்சிகாவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால், மனமுடைந்த ருச்சிகா தற்கொலை செய்துகொண்டார்.

இதுதொடர்பான வழக்கில், கடந்த 2010ம் ஆண்டு ரத்தோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த வழக்கில் ரத்தோர் குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்தது. 7 மாத சிறைவாசம் அனுபவித்த ரத்தோருக்கு கடந்த 2010ம் நவம்பரில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதால் தற்போது வெளியில் இருக்கிறார். 

இந்த நிலையில், ரத்தோர் தனது மனைவிக்கு புத்தம் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார் வாங்கி பரிசாக கொடுத்துள்ளார். இந்த காருக்கு தற்போது ரூ.9.05 லட்சம் கொடுத்து பேன்ஸி நம்பர் வாங்கியுள்ளார். சண்டிகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த ஏலத்தில் கடும் போட்டிக்கு மத்தியில் அதிக தொகை கொடுத்து சிஎச் 01 ஏஎம் 0001(CH01 AM 0001) என்ற எண்ணை அவர் ஏலம் எடுத்தார்.

ஏலம் முடிந்தவுடன் ரத்தோர் கூறுகையில்,"நெருக்கடியான சமயங்களில் என் மனைவி எனக்கு உறுதுணையாக இருந்தார். எனவேதான் அவருக்கு பரிசாக வழங்கிய காருக்கு, கடும் போட்டிக்கு மத்தியிலும் அதிக தொகை கொடுத்து இந்த எண்ணை ஏலத்தில் எடுத்தேன்," என்று கூறினார்.

முன்னாள் டிஜிபி ரத்தோரின் மனைவி பிரபல வக்கீல் என்பது குறிப்பிடத்தக்கது.

-DINAVIDIYAL!