டர்பன்:ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே, புராஸ்டேட் புற்றுநோய் காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.ஆப்ரிக்காவில் உள்ள ஜிம்பாப்வே நாடு கடந்த, 80ம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றது. இந்த நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய ராபர்ட் முகாபே கடந்த, 20 ஆண்டுகளாக அதிபராக இருந்து வருகிறார். இவருக்கு புராஸ்டேட் புற்றுநோய் இருப்பதாக கடந்த, 2008ம் ஆண்டு விக்கிலீக்சில் செய்தி வெளியானது. இதற்கிடையே கடந்த வாரம் இவர் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இவரது மனைவி கிரேஸ் உடன் இருப்பதாகவும் முகாபேயின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், ஜிம்பாப்வே பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.ஆனால், முகாபே கவலைக்கிடமாக உள்ள செய்தியை, ஜிம்பாப்வே அரசு அதிகாரிகள் மறுத்துள்ளனர்.-DINAVIDIYAL!