HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Wednesday, 11 April 2012

மருந்து இறக்குமதி ஊழல்:கிலானி மகனுக்கு சம்மன்

இஸ்லாமாபாத்:மருந்து இறக்குமதி ஊழலில் சம்பந்தப்பட்ட பாகிஸ்தான் பிரதமர் கிலானியின் இளைய மகனுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானியின் மூத்த மகன் அப்துல் காதிர். இவர் கடந்த 2010ம் ஆண்டு, ஹஜ் யாத்திரைக்கு ஏற்பாடு செய்த விஷயத்தில் ஊழல் செய்ததாக புகார் உள்ளது. இந்நிலையில் இவரது இளைய மகன் அலி மூசா கிலானி, வெளிநாட்டிலிருந்து எபிட்ரின் மருந்தை அனுமதிக்கப்பட்ட அளவை அதிகமாக இறக்குமதி செய்த விஷயத்தில் சிக்கியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு ஓராண்டில் 500 கிலோ எபிட்ரின் தான் இறக்குமதி செய்யப்பட வேண்டும். இதை மீறி சுகாதாரத்துறை அமைச்சகம் 9,000 கிலோ எபிட்ரினை இறக்குமதி செய்துள்ளதால், சுகாதாரத்துறை அமைச்சகத்தை விசாரிக்க வேண்டும், என போதை தடுப்பு படை துறை சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தது. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட கிலானியின் மகன் அலி மூசா, கோபமடைந்தார். இதையடுத்து இவரது செயலர் மூலம் போதை தடுப்பு துறை தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெறும் படி வற்புறுத்தப்பட்டது. போதைதடுப்பு துறை, தாங்கள் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெறுவதாக கூறியதும், தலைமை நீதிபதி இப்திகார் அலி சவுத்ரி, இந்த மனுவை வாபஸ் பெறுவதை அனுமதிக்க மறுத்துவிட்டார்.

பாகிஸ்தானில் முல்தானில் உள்ள இரண்டு மருந்து கம்பெனிகளுக்கு அலி மூசா சிபாரிசின் மூலம், 9 ஆயிரம் கிலோ அளவுக்கு எபிட்ரின் மருந்து சப்ளை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரித்த இரண்டு அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர்.இதையெல்லாம் விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி இப்திகார் அலி சவுத்ரி, எபிட்ரின் மருந்து இறக்குமதி குறித்து விசாரித்த அதிகாரிகளை இடமாற்றம் செய்தது குறித்த விவரத்தை கேட்டுள்ளார். 700 கோடி ரூபாய் அளவுக்கு நடந்த இந்த ஊழலில் கிலானி மகன் சம்பந்தப்பட்டுள்ளது தெளிவாக தெரிவதால், அவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

-DINAVIDIYAL!