HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Thursday, 12 April 2012

நம்ப முடியாத விலையில் எர்டிகா எம்பிவியை களமிறக்கிய மாருதி

ரூ.5.89 லட்சம் என்ற  ஆரம்ப விலையில் 7 பேர் பயணம் செய்யும் வசதிகொண்ட எர்டிகாவை மாருதி விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
மும்பையில் நடந்த விழாவில் மாருதி தலைவர் சின்சோ நகனிஷி எர்டிகாவை முறைப்படி அறிமுகம் செய்து வைத்தார். இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் காராகஎர்டிகா இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.ரிட்ஸ் காரின் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டுள்ள எர்டிகா மூலம் எம்பிவி கார் செக்மென்ட்டில் மாருதி அடியெடுத்து வைத்துள்ளது. டேஷ்போர்டு மற்றும் உள்ளலங்காரம் அனைத்தும் ஸ்விப்ட் காரிலிருந்து பெற்றுள்ளது எர்டிகா.



ஆனாலும், பிரிமியம் லுக்குடன் இருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் வந்துள்ள எர்டிகா தலா 3 வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

1372 சிசி கொண்ட 1.4 லிட்டர் கே-14 எஞ்சின் 95 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். எஸ்எக்ஸ்-4 காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் கொண்ட மாடலில் எர்டிகா கிடைக்கும்.-DINAVIDIYAL!