HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Thursday, 12 April 2012

மைக்ராவின் பெட்ரோல் எஞ்சினுடன் வரும் ரினால்ட் பல்ஸ்

டீசலில் மாடலில் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட பல்ஸ் காரின் பெட்ரோல் மாடலையும் விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது ரினால்ட்.

மைக்ராவின் அச்சு அசலாக இருக்கும் பல்ஸ் காரை கடந்த ஜனவரியில் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வந்தது ரினால்ட். டீசல் மாடலில் மட்டும் தற்போது பல்ஸ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு தக்கவாறு பல்ஸ் காரின் பெட்ரோல் மாடலையும் விரைவில் விற்பனைகக்கு கொண்டு வருகிறது ரினால்ட். மைக்ராவில் உள்ள அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்தான் பல்ஸ் காரிலும் பொருத்தப்பட உள்ளது.

இந்த எஞ்சின் 72 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக இருக்கும். பெட்ரோல் பல்ஸ் காரின் டாப் வேரியண்ட்டில் ஏர்பேக், ஏபிஎஸ், மியூசிக் சிஸ்டம், சென்ட்ரல் லாக்கிங் உள்ளிட்ட ஏராளமான தொழில்நுட்ப வசதிகளுடன் வருகிறது.

இந்த நிலையில், நிசான் மைக்ராவின் டீசல் மாடலைவிட பல்ஸ் டீசல் மாடல் விலை கூடுதலாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதேபோன்று, பெட்ரோல் பல்ஸ் காரும் பெட்ரோல் மைக்ராவைவிட கூடுதலான விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.-DINAVIDIYAL!