HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Saturday, 21 April 2012

குறைந்த விலை ஆன்ட்ராய்டு டேப்லெட்: கூகுள் திட்டம்

இது ஆன்ட்ராய்டு காலம் என்று சொல்லலாம். ஏனெனில் மின்னனு சந்தையில் இப்போது ஆன்ட்ராய்டு மொபைல்கள் மற்றும் டேப்லெட்டுகள் கொட்டி பறக்கின்றன. தொடக்கத்தில் ஆன்ட்ராய்டு சாதனங்களின் விலை அதிகமாக இருந்தன. அதனால் பலர் அவற்றை வாங்கத் தயங்கினர். ஆனால் இப்போது அவற்றின் விலை கணிசமாக குறைந்து விட்டதால் அதிகமான மக்கள் அதிக அளவில் ஆன்ட்ராய்டு மொபைல்கள் மற்றும் டேப்லெட்டுகளை விரும்பி வாங்குகின்றனர்.
அதனால் கூகுளின் தலைமை இயக்குனர் லாரி பேஜ் கூறும்போது குறைந்த விலையில் ஆன்ட்ராய்டு டேப்லெட்டுகளை வழங்குவதில் கூகுள் தீவிரமாக இருக்கிறது என்கிறார். மேலும் வரும் காலத்தில் குறைந்த விலை ஆன்ட்ராய்டு டேப்லெட்டுகள் விற்பனையில் சாதனை புரியும் என்று ஆருடம் கூறுகிறார்.
மேலும் ஆப்பிள் ஐபேட் மற்றும் ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் இயங்கும் குறைந்த விலை அமேசான் கிண்டில் பயர் போன்ற டேப்லெட்டுகளிடமிருந்து கூகுள் கடுமையான போட்டியை சந்தித்துக் கொண்டிருக்கிறது என்கிறார்.
கூகுள் தயாரித்து வரும் நெக்சுஸ் டேப்லெட் வரும் ஜூலையில் வெளிவர இருக்கிறது. இந்தியாவைப் பொருத்தவரை சமீபத்தில் பல்வேறு குறைந்த விலை ஆன்ட்ராய்டு டேப்லெட்டுகள் களம் இறங்கியிருக்கின்றன.
குறிப்பாக மைக்ரோமேக்சின் பன்புக் டேப்லெட் ஆன்ட்ராய்டு ஐஸ்க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளத்தில் இயங்குகிறது. அதுபோல் எச்சிஎல் மற்றும் சின்க் போன்ற நிறுவனங்களும் தமது குறைந்த விலை ஆன்ட்ராய்டு போன்களை களமிறக்குகின்றன.
அதற்கும் மேலாக இந்திய அரசே மிகக் குறைந்த விலையில் ஆகாஷ் என்ற ஆன்ட்ராய்டு டேப்லெட்டைக் களமிறக்கி இருக்கிறது.
எனவே கூகுளின் குறைந்த விலை ஆன்ட்ராய்டு டேப்லெட் இந்திய சந்தையில் பெரிய வெற்றியைப் பெறும் என நம்பலாம்.

-DINAVIDIYAL!