விப்ரோ இ.கோ ஏரோ லேப்டாப் கணினி துறையில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அதிலிருக்கும் புதுமையான விஷயங்கள் மற்றும் அதன் தனித்துவமான ஸ்டைல் மற்றும் குறைந்த விலை ஆகியவை பெரும்பாலான மக்களைக் கவரும் என்று நம்பப்படுகிறது.
இந்த விப்ரோ லேப்டாப் மிகவும் மெல்லியா லேப்டாப் ஆகும். 1.7 கிலோ எடையுடன் வரும் இந்த லேப்டாப் 64பிட் விண்டோஸ் 7 அல்டிமேட் இயங்கு தளத்தில் இயங்கும். மேலும் 3 யுஎஸ்பி 2.0 போர்ட்டுகள், 1.3 எம்பி கேமரா, எச்டிஎம்ஐ வசதி, 4ஜிபி ரேம், இன்டல் எச்டி க்ராபிக்ஸ், கார்டு ரீடர், ஸ்டீரியோ, 500 ஜிபி 2.5 இன்ச் ட்ரைவ், சிக்லெட் கீபோர்டு, 32ஜிபி எஸ்எஸ்டி கார்டு மற்றும் லயன் பேட்டரி போன்ற அம்சங்களை இந்த விப்ரோ லேப்டாப் வழங்குகிறது.
மேலும் இந்த லேப்டாப் 1366 x 768 பிக்சல் ரிசலூசன் கொண்ட 14 இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. இதில் எவ்வளவு நேரம் வேலை செய்தாலும் இந்த லேப்டாப் எளிதில் சூடாகாது. இதில் உள்ள மின் விசிறி இதை எப்போதும் இதமாக வைத்திருக்கும். மேலும் இதில் டைப் அடிப்பதும் சூப்பராக இருக்கும்.
இந்த லேப்டாப்பில் ஆடியோ மற்றும் வீடியோ வசதிகள் அபாரமாக உள்ளன. அதனால் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு இந்த லேப்டாப்பில் பஞ்சம் இருக்காது.
இந்த விப்ரோ லேப்டாப் ரூ.55000க்கு விற்கப்படும். மேலும் இந்த லேப்டாப்பிற்கு 1 வருட உத்திரவாதமும் வழங்கப்படும்.
-DINAVIDIYAL!