நோக்கியா நிறுவனம் சமீபத்தில் மிகவும் குறைந்த விலையில் ஒரு புதிய மொபைலை நைஜீரியாவில் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த மொபைலிற்கு நோக்கியா 103 என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த மொபைலின் விலை ரூ.1000 மட்டுமே.
-DINAVIDIYAL!
இந்த புதிய மொபைல் 1.36 இன்ச் கருப்பு மற்றும் வெள்ளை டிஸ்ப்ளே மற்றும் ப்ளாஷ் லைட்டுடன் வருகிறது. மேலும் இந்த மொபைலில் ஒரு சில கேம்களும் மற்றும் ஸ்டீரியோ எப்எம்மும் உள்ளன.
இந்த மொபைலில் இருக்கும் 800 எம்எஹெர்ட்ஸ் பேட்டரி 11 மணி நேர இயங்கு நேரத்தையும் அதே நேரத்தில் 27 மணி நேர ஓய்வு நேரத்தையும் வழங்குகிறது.
மேலும் இந்த மொபைலை தூசு மற்றும் கீறல் ஆகியவற்றிலிருந்து காக்க ஒரு உறையும் வழங்கப்படுகிறது. இந்த மொபைல் மிகவும் உறுதியானதாகும்.
முதலில் இந்த மொபைல் நைஜீரியாவில் விற்பனைக்கு வரும். பின் மற்ற நாடுகளிலும் விற்பனை செய்யப்படும்.-DINAVIDIYAL!