HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Saturday, 21 April 2012

டு பிளசிஸ், பத்ரிநாத் அதிரடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் சிறப்பான துவக்கம்

சென்னை: ஐபிஎல் 5 தொடரில் இன்றைய முதல் போட்டியில் 147 ரன்களை சேஸ் செய்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, டு பிளசிஸ், பத்ரிநாத் ஜோடி நல்ல துவக்கத்தை அளித்துள்ளது.

4 ஓவர்களின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் விக்கெட் இழப்பின்றி 29 ரன்கள் எடுத்திருந்தது. 

ஐபிஎல் 5 தொடரின் இன்றைய முதல் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. போட்டியின் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ரஹானேயும், டிராவிடும் அதிரடியாக ஆடினர்.

3 பவுண்டரிகளை விளாசிய ரஹானே 15 ரன்கள் எடுத்த நிலையில், அஸ்வினின் சுழலில் சிக்கினார். அவரை தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்த கேப்டன் ராகுல் டிராவிட் 1 சிக்ஸ் 3 பவுண்டரிகள் அடித்து 26 ரன்களை எடுத்துவிட்டு பிரிவிலியனுக்கு நடையை கட்டினார்.

அதன்பிறகு வந்த மேனாரியா, ஓவைஸ் ஷா ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பாக ஆடி வந்த ஓவைஸ் ஷா 40 பந்துகளில் அரைசதம் கடந்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த மேனாரியா 36 ரன்கள் எடுத்த நிலையில் ஜாகதியிடம் கேட்சாகி வெளியேறினார்.

கடைசி பந்து வரை களத்தில் இருந்த ஓவைஸ் ஷா, 43 பந்துகளை சந்தித்து 3 சிக்ஸ், 4 பவுண்டரிகளை அடித்து 52 ரன்களை குவித்து, டோணியிடம் கேட்சாகி அவுட்டானார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட்களை இழந்து 146 ரன்களை எடுத்தது.

-DINAVIDIYAL!