லூயிஸ்பர்க்:அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் சர்வதேச சீழ்க்கையொலி(விசிலடித்தல்) மாநாடு நடக்கிறது.வாயை சுழித்து சீழ்க்கையடிப்பது நாகரிகமற்ற செயலாக ஒரு காலத்தில் கருதப்பட்டது. ஆனால், இதையே தற்போது சாதனை செயலாக மாற்றி மாநாடு நடத்த ஆரம்பித்துவிட்டனர். அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள லூயிஸ்பர்க் நகரில், 39வது சீழ்க்கையடிப்பவர்கள் மாநாடு சமீபத்தில் துவங்கியது. இந்த மாநாடு இன்று நிறைவு பெறுகிறது.
அமெரிக்காவின் 20 மாகாணங்களை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது, இந்தியா, ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட ஒன்பது நாடுகளை சேர்ந்தவர்களும் இந்த மாநாட்டில் நடக்கும் போட்டியில் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். சீழ்க்கை மூலமாக பறவைகளை போல ஒலியெழுப்புதல், பாரம்பரிய இசை மற்றும் திரை இசை, போன்ற பிரிவுகளில் போட்டியாளர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த உள்ளனர். பள்ளி சிறுவர்கள் முதல் பல் இல்லாத முதியவர்கள் வரை இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
-DINAVIDIYAL!