-DINAVIDIYAL!
எலெக்ட்ரானிக் உலகைக் கலக்கி வரும் சாம்சங் சமீபத்தில் சாம்சங் எஸ்டி200எப் என்ற ஒரு புதிய டிஜிட்டல் கேமராவைக் களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய கேமரா சாம்சங்கிற்கு புதிய மைல்கல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் இந்த புதிய கேமரா நவீன தொழில் நுட்பங்களுடன் வருகிறது. அதாவது 16 மெகா பிக்சல் கொண்ட இமேஜ் சென்சார், அதிக வசதி கொண்ட ஆப்டிக்கல் சூம், சிசிடி கேமரா, ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டெபிலைசேசன், வைபை, ஹாப் வீடியோ க்ராபிக்ஸ் அரே, 3 இன்ச் அமோல்டு டிஸ்ப்ளே, 720பி வீடியோ பதிவு செய்யும் வசதி, ரிமோட் வியூவ்பைன்டர், லையன் பேட்டரி, ஆட்டோமேட்டிவ் சேமிப்பு, ஆட்டோ போக்கப், லைப் பனோரமா மற்றும் மோஷன் கேப்சர் என ஏராள வசதிகளுடன் வருகிறது.
இந்த கேமராவில் ஏராளமான சூட்டிங் மோடுகள் உள்ளன. அதனால் இதில் புதுமையான முறையில் போட்டோ எடுக்க முடியும். மேலும் இந்த கேமராவை ஸ்மார்ட்போன், டிவி மற்றும் டேப்லெட் ஆகியவற்றோடு மிக எளிதாக இணைக்க முடியும். மேலும் இந்த கேமராவில் பல அனிமேசன்களும் உள்ளன.
வலிமையான் சூமிங் வசதியுடன் இந்த கேமரா வருவதால் வருவதால் புகைப்படக் கலைஞர்களின் சொத்தாக இந்த கேமரா இருக்கும் என நம்பலாம். இதில் எடுக்கும் படங்கள் மற்றும் வீடியோக்களை இணையதளத்திற்கு நேரடியாக அனுப்பவும் முடியும்.
சிவப்பு மற்றும் கருப்பு ஆகிய வண்ணங்களில் வரும் இந்த சாம்சங் கேமராவின் விலை ரூ.11000 ஆகும்.