அதிரடியாக பல மின்னனு சாதனங்களை கொடுக்கும் லெனோவோ நிறுவனம் புதிய ஐவிபிரிட்ஜ் லேப்டாப்பை வருகிற ஜூன் மாதம் அறிமுகம் செய்யும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த இன்டெல் ஐவிப்ரிட்ஜ் லேப்டாப் வெகு நாட்களாகவே வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இதில் கொடுக்க இருக்கும் புதிய ஐவிபிரிட்ஜ் பிராசஸர் லேப்டாப் மார்கெட்டில் பெரிய ஹிட் கொடுக்கும் என்று கருதப்படுகிறது.
இன்டெல் பிராசஸரான இந்த 22என்எம் ஐவி பிராசஸர் ஏப்ரல் 23-ஆம் தேதி அறிமுகமாகும் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் அதன் பிறகு ஏப்ரல் 29-ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டது. இப்போது ஜூன் மாதம் 5-ஆம் தேதி இன்டெல் ஐவிபிரிட்ஜ் லேப்டாப் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால் இதுவரை சிறப்பான தொழில் நுட்பங்களை வழங்கிய இன்டெல் பிராசஸர் கொண்ட இந்த ஐவிபிரிட்ஜ் லேப்டாப் மின்னனு சாதன உலகில் சிறப்பான வரவேற்பை பெரும் என்று மட்டும் இப்போதே கூற முடியும். இந்த புதிய லேப்டாப் பற்றி அறிய இன்னும் சிறிது காத்திருக்க வேண்டி இருக்கிறது.-DINAVIDIYAL!