HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Saturday, 21 April 2012

மு.க.அழகிரி மீது நில அபகரிப்பு புகார்: போலீஸ் கமிஷ்னரிடம் பெண் மனு

மதுரை: மத்திய ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரி உள்பட மதுரை திமுக பிரமுகர்கள் மீது போலீசில் ஒரு பெண் நில அபகரிப்பு புகார் கொடுத்துள்ளார்.

மதுரை சோலையழகுபுரம், கீழ எம்.கே.புரத்தை சேர்ந்த மாரியப்பனின் மனைவி சுந்தரம்பாள் (48). இவர் இன்று காலை மதுரை போலீஸ் கமிஷனர் கண்ணப்பனிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில்,

பழங்காநத்தம் அருகே உள்ள மாடக்குளம் பகுதியில் எனக்கு சொந்தமான பூர்வீக சொத்து 1 ஏக்கர் 8 செண்ட் நிலம் இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை முன்னாள் திமுக மேயர் குழந்தைவேலு, திமுக வட்டச் செயலாளர் உதயசூரியன் மற்றும் விவேக் ரவிக்குமார், கண்ணன் ஆகியோர் சேர்ந்து போலி ஆவணம் தயாரித்து எனக்குச் சொந்தமான நிலத்தை அபகரித்து விற்று விட்டனர்.

இது குறித்து நான் அவர்களிடம் கேட்டபோது, உனது சொத்தை நாங்கள் மு.க.அழகிரியிடம் ஒப்படைத்து விட்டோம். உன்னால் முடிந்தால் நீ அவரிடம் நிலத்தை வாங்கி கொள் என்று மிரட்டுகின்றனர். மு.க.அழகிரி தற்போது அதிகார பலத்தில் உள்ளதால் எனது பூர்வீக சொத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக் கொண்ட கமிஷனர் கண்ணப்பன் இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

அழகிரிக்கு கலெக்டர் அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை:

இதற்கிடையே மதுரை சிவரக்கோட்டையில், தயா பொறியியல் கல்லூரி கட்டப்பட்டதில் நடந்த விதி மீறல்கள் குறித்து அழகிரிக்கு, கலெக்டர் அனுப்பிய நோட்டீசுக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
-DINAVIDIYAL!