HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Friday, 13 April 2012

இந்தியர்களை அவமானப்படுத்துவது அப்புறம் மன்னிப்பு கேட்பது - அமெரிக்காவுக்கு இதே வேலை

இந்தியர்களை அவமானப்படுத்துவதில் அப்படி என்ன தான் சந்தோஷமோ அமெரிக்க அதிகாரிகளுக்கு. பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான், நியூயார்க் நகரில் உள்ள யேல் பல்கலைகழகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றார். 

அங்கு சென்ற அவரை நியூயார்க் விமானநிலையத்தில் விசாரணை என்ற பெயரில் சுமார் 2 மணி நேரம் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டார். இதில் ஷாருக்கானுக்கு அதிருப்தி ஏற்பட்டதாக தெரிகிறது. 

இந்த சம்பவம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறும் போது, விசாரணை என்ற பெயரில் இந்தியர்களை இப்படி நடத்துவது தொடர் கதையாகவே உள்ளது என்றார்.

இவ்விவகாரத்தை அமெரிக்கா அதிகாரிகளிடம் எடுத்து செல்லுமாறு அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிருபமா ராவுக்கு உத்தரவிட்டுள்ளார். 

மேலும் அவர் முதலில் தடுத்துநிறுத்துவது பின்னர் அதற்காக வருத்தம் தெரிவிப்பது என இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறக்கூடாது என்றார்.-DINAVIDIYAL!