HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Wednesday, 11 April 2012

மாஜி காதலன் மீது கோவம்... ஆணுறுப்பை நசுக்கி கிழித்த அமெரிக்க காதலி!

லண்டன்: அமெரிக்காவானாலும், ஆண்டிப்பட்டியானாலும் மனிதர்களுக்கு உணர்வுகள் ஒரே மாதிரிதான். நம்ம ஊரில் அடிக்கடி ஆணுறுப்பை கட் செய்த பெண்களின் கதை குறித்த செய்திகளைப் படித்திருக்கிறோம், பார்த்திருக்கிறோம். அதே பாணியில் அமெரிக்காவிலும் ஒரு பெண் தனது முன்னாள் காதலன் மீது கொண்ட ஆத்திரத்தால், காதலரின் ஆணுறுப்பை கைகளால் பிடித்து கடுமையாக நசுக்கி படுகாயப்படுத்தியுள்ளார். இதில் ஆணுறுப்பு கிழிந்து போய் விட்டதாம்.

இந்த சம்பவம் நடந்தது இன்டியானாவில் உள்ள முன்சி என்ற நகரில். சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயர் கிறிஸ்டினா ரீபர். 43 வயதாகி விட்டது. இவரது முன்னாள் காதலருக்கு வயது 57. இருவரும் கடந்த 8 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இடையில் என்ன நடந்ததோ பிரிந்து விட்டனர்.

இந்த நிலையில், மாஜி காதலர் மீது திடீரென கோபம் கொண்ட கிறிஸ்டினா நேராக அவரது வீட்டுக்குப் போனார். பிரிந்து போன காதலியைப் பார்த்த சந்தோஷத்தில் வரவேற்பு கொடுத்துள்ளார் மாஜி காதலர்.

ஆனால் போன வேகத்தில் மாஜிக் காதலரைக் கீழே தள்ளிய கிறிஸ்டினா, அவரது ஆணுறுப்பைப் பிடித்து இரு கைகளாலும் பலம் கொண்டமட்டும் நசுக்கியுள்ளார். இதில் ஆணுறுப்பு பெரும் சேதமடைந்தது, ஒரு பகுதி கிழிந்தும் போய் விட்டது. வலியாலும், வேதனையாலும், கொட்டும் ரத்தத்தாலும் அலறித் துடித்தார் மாஜி காதலர்.

அதைப் பொருட்படுத்தாத கிறிஸ்டினா வந்த வேலை முடிந்த சந்தோஷத்தில் அங்கிருந்து கிளம்பிப் போய் விட்டார். வலியாலும், காயத்தாலும் துடித்த மாஜி காதலரை மருத்துவமனைக்குக் கொண்டு போய்ச் சேர்த்துள்ளனர். இன்னும் ரத்தம் கொட்டுவது முழுமையாக நிற்கவில்லையாம். காயமும் பலமாக உள்ளதாம்.

போலீஸார் கிறிஸ்டினாவைக் கைது செய்து கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.-DINAVIDIYAL!