ஏமன் : ஏமன் நாட்டில் அல்-கொய்தா தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இதுவரை 64 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏமன் நாட்டின் அதிபராக, 33 ஆண்டுகளாக பதவி வகித்த அலி அப்துல்லா சலேவை பதவி விலக கோரி, ஓராண்டுக்கும் மேலாக மக்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து அவர் பதவி விலகினார். தற்போது ஏமன் நாட்டின் புதிய அதிபராக காபட்ரபோ மன்சூர் ஹாடி பதவியேற்றுள்ளார்.
தீவிரவாதிகள் அட்டகாசம்
இதனிடையே ஏமனில் தற்போது அல்-கொய்தா தீவிரவாதிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. அந்நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள அபுயான் மாகாணத்தில் உள்ள ராணுவ முகாம் மீது அல் காய்தா தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அப்போது ராணுவத்தினர் பதிலடி கொடுத்தார்கள். இரு தரப்பினர் இடையே நடந்த சண்டையில் பலியானவர்கள் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்திருப்பதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. 40 தீவிரவாதிகளும், 18 ராணுவ வீரர்களும், அப்பாவி பொதுமக்கள் 6 பேரும் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த பல ராணுவ வீர்ரகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சோமாலியாவில் தாக்குதல்
இதேபோல் சோமாலியா நாட்டில் உள்ள மிகப்பெரிய நகரமான மொகதீஷூ வில் உள்ள சந்தையில் அல்காய்தா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. -DINAVIDIYAL!