இந்தியாவின் ஒரிஸா மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் ஒரு மாதத்துக்கு முன்னதாக கடத்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வது என்று கடத்தப்பட்ட ஜினா ஹிகாகா அவர்கள் உறுதி வழங்கியுள்ளதால், அவரை விடுதலை செய்வதாக ஒலிப்பதிவு நாடா செய்தி ஒன்றில் மாவோயிஸ்டுகள் கூறியுள்ளனர்.
இந்தியாவின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்கள் தீவிரமாகச் செயற்படுகிறார்கள்.
அரசாங்கமும், பொலிஸாரும் அப்பகுதி பழங்குடியின மக்களின் தேவைகளை புறக்கணிப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
நாட்டின் மிகவும் பெரிய உள்ளூர் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்காரர்கள் என அவர்களை இந்திய அரசாங்கம் விபரிக்கிறது.-DINAVIDIYAL!