-DINAVIDIYAL!
தெலுங்கில் நயன்தாரா சீதையாக நடித்து வெளியான ஸ்ரீ ராமராஜ்ஜியம் படம் தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீசாகிறது. இப்படத்தில் ராமராக தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடித்துள்ளார்.
படங்களில் பரபரப்பாக இல்விட்டாலும், இன்றைக்கு எந்த ஊடகத்திலும் அவரது செய்தியே பிரதானமாக இருப்பதால், ஸ்ரீராமராஜ்யம் நல்ல வசூலைத் தரும் என தயாரிப்பாளர்கள் நம்புகிறார்கள்.
வரும் ஏப்ரல் 13 அன்று, தமிழ் புத்தாண்டில் இப்படம் திரைக்கு வரும் என தெரிவித்திருந்தனர். ஆனால் 'பெப்சி'யின் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் இப்படத்தின் டப்பிங் வேலைகள் பாதிக்கப்பட்டன. இதனால் தமிழ் புத்தாண்டு அன்று இப்படம் திரைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே இப்படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி வைத்திருக்கிறார்கள்.
ஏப்ரல் 13 அன்று திரைக்கு வர இருந்த இத்திரைப்படம், ஏப்ரல் 20 -ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கான வேலைகளில் இப்படத்தின் தயாரிப்பாளர் கிரண் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்.
பாபு இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு, இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் சிறியதும் பெரியதுமாக மொத்தம் 16 பாடல்கள் உள்ளன!