ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தியே உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் பிரிட்டனின் சனல் 4 அலைவரிசையில் ஒளிபரப்பப்பட்ட இலங்கை குறித்த வீடியோத் தொகுப்பில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் உள்ளிட்ட தமிழ் மக்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுவதனைப் பார்வையிட்ட சோனியா காந்தி அதனால் மிகவும் விரக்தி அடைந்த நிலையிலேயே இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்தியுள்ளாரென காங்கிரஸ் கட்சியின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட புகைப்படங்கள் சில இந்தியாவிலுள்ள சகல தமிழ் ஊடகங்களிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டதுடன் அது இலங்கை மீதான கவனத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது.
அத்துடன் தமிழகத்தின் இரு பிரதான கட்சிகளான அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகியன கட்சி ஆதரவாளர்களின் விருப்பத்துக்கு அமைவாகவே செயற்பட வேண்டி இருந்ததுடன் அக்கட்சிகள் அவ்வாறு செயற்பட்டால் காங்கிரஸ் கட்சியும் தூர விலகி நிற்க முடியாது.
இதேவேளை மார்ச் 22 இல் ஜெனீவாவில் வாக்கெடுப்பு இடம்பெறுவதற்கு சில தினங்கள் இதே நிலையில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனனும் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்கப் போவதில்லையென உறுதியாகக் கூறியிருந்தனர்.
இந்நிலையில் தமிழ் எம்.பி.க்கள் இலங்கை குறித்த சில புகைப்படங்களை சோனியா காந்திக்கு காண்பித்து, இலங்கைக்கு எதிராக இந்தியா ஒருபோதும் வாக்களிக்கமாட்டாதென குழப்ப நிலையில் உள்ளனரெனக் கூறியுள்ளனர்.
இதனை அடுத்தே இவ்விடயம் தொடர்பாக தான் உறுதியான நடவடிக்கை எடுக்கப்போவதாக தமிழக எம்.பி.க்களிடம் உறுதியளித்துள்ளார் சேனியா காந்தி.
இதன் பின்னர் பிரதமர் மன்மோகன் சிங்கை உடனடியாகத் தொடர்பு கொண்ட சோனியா இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கக்கூடாதென்ற நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளாரென பெயர் குறிப்பிடாத காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
சோனியா காந்தியின் கணவர், முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உத்தரவால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் பிரபாகரனின் மகன் கொல்லப்பட்ட புகைப்படத்தை பார்த்து அவர் இவ்வாறான தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதும் அதனால் இந்திய இலங்கை உறவில் திருப்பம் ஏற்பட்டுள்ளமையும் தான் விதியாக அமைந்ததெனவும் அவர் கூறியுள்ளார்.-DINAVIDIYAL!