HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Sunday, 1 April 2012

கூகுள் 'ஜி ட்ரைவ்' விரைவில்! _

கூகுள் 'ஜி ட்ரைவ்' எனும் ஒன்லைன் ஸ்டோரேஜ் (online storage) வசதியினை அடுத்த மாதம் முதல் அதன் பாவனையளர்களுக்கு வழங்கவுள்ளது.

மேக நினைவகம் (Cloud storage) தொழில்நுட்பத்தின் மூலம் வழங்கப்படவுள்ள இவ்வசதியானது அடுத்தமாதத்தின் முதல் வாரம் ஆரம்பிக்கப்படலாம் எனத் தெரிகின்றது.

தொழில்நுட்ப உலகில் தற்போது அதிகமாகப் பயன்படுத்தப்படும் வசதிகளில் ஒன்றாக மேக நினைவகமும் திகழ்கின்றது. 

பொதுவாக கணனியில் உள்ள வன்தட்டில் எமது தகவல்களைச் சேமித்து வைப்பதால் என்றாவது ஒரு நாள் அதில் இருக்கும் தகவல்கள் மீட்க இயலாமல் போகலாம் .மேலும் ஒப்பீட்டளவில் பாதுகாப்பும் குறைவு. 

எனினும் கிளவ்ட் ஸ்டோரேஜ் வசதியை பாவிப்பதனால் இத்தகைய சிக்கல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. 

நாம் சேமித்து வைத்திருக்கும் தகவல்களைப் பாதுகாப்பாகவும் அதே சமயம் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் உலகில் எங்கிருந்தும் பயன்படுத்தும் சேவையை இத் தொழில்நுட்பம் நமக்கு அளிக்கின்றது. 

கூகுள் சுமார் 1 ஜி.பி வரையான நினைவக வசதியினை அதன் பாவனையாளர்களுக்கு வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதைப் போன்ற வசதியினை வழங்கும் ' ட்ரொப் பொக்ஸ்' வேகமாக வளர்ச்சியைடைந்து வருவதனைக் கருத்தில் கொண்டே கூகுளும் தற்போது களத்தில் இறங்கியுள்ளதாகத் தெரிகின்றது. 
-DINAVIDIYAL!