டெல்லி: ஒலிம்பிக்கில் பெண்களுக்கான மல்யுத்த போட்டியில் பங்கேற்க, முதல் முறையாக இந்திய வீராங்கனை ஒருவர் தகுதி பெற்றுள்ளார்.
இந்த ஆண்டு ஜூலை 27ம் தேதி லண்டன் ஒலிம்பிக் போட்டி துவங்க உள்ளது. இதில் நடைபெற உள்ள போட்டிகளுக்கான தகுதிச் சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஆசிய மல்யுத்த தகுதி சுற்று போட்டி கஜகஸ்தானில் உள்ள அஸ்தானாவில் நடைபெற்றது.
இதில் பெண்களுக்கான 55 கிலோ எடை பிரிவிற்கான தகுதிச் சுற்றின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை கீதா, கொரியாவின் ஜி இன் உம் உடன் மோதினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியாவின் கீதா, போட்டியின் முடிவில் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிப் பெற்று தங்கப்பதக்கத்தை பெற்றார். இதன்மூலம் லண்டனில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க கீதா தகுதிப் பெற்றார்.
ஒலிம்பிக்கில் பெண்களுக்கான மல்யுத்த போட்டியில் பங்கேற்க இந்திய வீராங்கனை ஒருவர் தகுதிப் பெறுவது இதுவே முதல் முறையாகும்.
ஆண்கள் பிரிவு:
லண்டன் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான மல்யுத்த போட்டியில் பங்கேற்க இந்திய தரப்பில் அமித்குமார் (55 கிலோ), யோகேஷ்வர் தத்(60 கிலோ) ஆகியோர் ஏற்கனவே தகுதிப் பெற்றுள்ளனர். பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர் சுஷில்குமார் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இன்னும் தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.-DINAVIDIYAL!