HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Wednesday, 11 April 2012

ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் வீடு திரும்பியதால் சென்னை போக்குவரத்து ஸ்தம்பிப்பு

சென்னை: சுனாமி எச்சரிக்கையை அடுத்து சென்னையில் அரசு அலுவலகங்களில் இருந்தும், பள்ளிகளில் இருந்தும் அனைவரும் வெளியேறியதால் சென்னை நகரம் ஸ்தம்பித்துப் போனது.

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கையை அடுத்து தமிழ்நாட்டிலும் கடற்கரை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. சென்னையில் அரசு, தனியார் அலுவலகங்களில் இருந்தும் பள்ளிகளில் இருந்து அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதனால் நகர்முழுவதும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தேனாம்பேட்டை, அண்ணாசாலை பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளதால் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன.

சென்னை நகரை சுனாமி தாக்கும் முன் வீட்டிற்கு சென்றுவிடவேண்டும் என்று அவசரம் அவசரமாக அனைவரும் கிளம்பியதால் ஏற்பட்ட நிலைமை இது. கடற்கரை பகுதிகளில் பேருந்துகளுக்கு கூட காத்திராமல் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் பொதுமக்கள் விரைந்தனர்.

பட்டினப்பாக்கம், நொச்சிக்கும், சாந்தோம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருவதால் கடற்காரை சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மின்சார ரயில்கள், பஸ்கள் என அனைத்துப் போக்குவரத்து வழிகளிலும் மக்கள் லட்சக்கணக்கில் குவிந்ததால் நகரமே ஸ்தம்பித்துப் போனது.-DINAVIDIYAL!