மதுரை:மதுரை யூனியன் கிளப் சார்பில், "டி.வி.எஸ்., ஐ.டி.எப்., பியூச்சர்' சர்வதேச டென்னிஸ் போட்டி, நேற்று துவங்கியது. தமிழ்நாடு டென்னிஸ் சங்க துணைத் தலைவர் கார்த்தி சிதம்பரம்
துவக்கி வைத்தார். மதுரை டென்னிஸ் பவுண்டேஷன் தலைவர் ஹரேஷ்,செயலாளர் சுப்ரமணியன், பொருளாளர் லட்சுமணன், கிளப் தலைவர் ராமதாஸ்,செயலாளர் மலையரசன், பொருளாளர் சுரேஷ் ஏற்பாடுகளை செய்தனர்.
ஆஸ்திரியா, போர்ச்சுகல், ஸ்பெயின், குரேஷியா, அமெரிக்காவைச் சேர்ந்த 15 வீரர்கள்,இந்தியாவைச் சேர்ந்த 17 வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் 10 வீரர்கள் தகுதிச் சுற்றிலும்,மற்றவர்கள் நேரடி போட்டியிலும் பங்கேற்கின்றனர். வெற்றி பெறுவோருக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும். இந்தியாவில் ஐந்து இடங்களில் போட்டிகள் நடத்தப்படும். மூன்று போட்டிகளில் வெற்றி பெறுவோர், உலகளவிலான தர வரிசை (500க்குள்) பட்டியலில் இடம்பெறுவர்.
நேற்று நடந்த தகுதிச் சுற்று:
சாகர் மஞ்சன்னா 6-1, 6-3 செட்களில் பரத் சீனிவாசன் பார்த்தசாரதியை வீழ்த்தினார். தேஜாஸ் சகுல்கர் 6-0, 6-0 செட்களில் யாஸ்ஹாஷ் உமேஷை வீழ்த்தினார். ஷாபாஸ் கான் 6-4, 6-3 செட்களில் ரஜத் மகேஸ்வரியை வீழ்த்தினார். அஜய் செல்வராஜ் 6-0, 6-2 செட்களில் ராகவேந்திரா சுப்ரமணியனை வீழ்த்தினார். புரூனோ பெட்ரோஷா 6-1, 6-1 செட்களில் விஷ்வநாத் சவதியை வீழ்த்தினார்.
பரிஷ் முகமது 6-3, 6-0 செட்களில் வினோத் கவுடாவை வீழ்த்தினார். ஜானி பெஞ்சமின் 6-1, 6-2 செட்களில் ரோட்னே தாத்தை வீழ்த்தினார். ரோனக் மனுஜா 6-2, 6-4 செட்களில் குகன் வெர்மாவை வீழ்த்தினார். விக்னேஷ் வீரபத்ரன் 6-0, 6-0 செட்களில் பிரதாத் ஆப்தேயை வீழ்த்தினார். ஆஸ்டின் கரோஷி (அமெரிக்கா) 6-0, 6-4 செட்களில் முர்தாஷா லோகானியை வீழ்த்தினார். இன்றும் (ஏப்., 22) போட்டிகள் நடக்க உள்ளன.