புதுடில்லி: நாட்டில் வளர்ந்து வரும் பயங்கரவாதம் அழிக்கும் நோக்குடன்
மாநிலங்களில் அமைக்கப்படவிருக்கும் தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் தொடர்பாக
சிறப்பு ஆலோசனை கூட்டம் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடக்கிறது. இந்த
கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெ., உள்பட பல்வேறு மாநில முதல்வர்கள்
பங்கேற்கின்றனர்.
கடந்த மாதம் உள்துறை அமைச்சகம் சார்பில் நடந்த கூட்டத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்படவிருந்தது. ஆனால் முதல்வர்களின் எதிர்ப்புக்கள் அதிகம் இருந்ததால் மே 5 ம் தேதி தனிப்பட்ட ஆலோசனை கூட்டம் நடக்கும் என பிரதமர் அறிவித்திருந்தார். இதன்படி இன்று இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
மாநில அரசின் உரிமையில் தலையிடுவதாக இந்த பயங்கரவாத தடுப்பு மையத்தில் அதிகாரம் இருப்பதாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணாமுல் காங்., உள்பட எதிர்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தமிழக முதல்வர் ஜெ., பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என குறை கூறினார்.
இம்மாநாட்டில் பங்கேற்க இன்று காலையில் டில்லிக்கு புறப்படும் போது சென்னையில் நிருபர்களிடம் பேசிய முதல்வர் ஜெ.,; தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பது தொடர்பான ஆலோசனைக்காகத்தான் டில்லி செல்கிறேன். எங்கள் தரப்பு கருத்துக்களை கூட்டத்தில் எடுத்துரைப்பேன். ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக இதுவரை யாரும் எங்களிடம் ஆதரவு கேட்கவில்லை. கட்சியின் நிலைப்பாட்டை இன்னும் எடுக்கவில்லை என்றார்.
-DINAVIDIYAL!