HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Monday, 31 December 2012

நோபல் விருது பெற்ற 103 வயது இத்தாலியப் பெண் மரணமடைந்தார்


இத்தாலி நாட்டில் உள்ள வடக்கு துரின் பகுதியில் 1909-ம் ஆண்டு வசதியான யூத தம்பதிகளுக்கு மகளாக பிறந்தவர் ரீட்டா லெவி மோன்டால் சினி. கல்லூரி கல்வியை முடித்து மருத்துவ பட்டம் பெற்ற அவர், மேற்கொண்டு மருத்துவ ஆராய்ச்சி கல்வியை தொடரவிடாமல், இத்தாலிய பாசிஸ்ட் அரசு 1936-ம் ஆண்டு தடை விதித்தது. இந்த தடையையும் மீறி ரத்தத்தில் உள்ள செல்களைப் பற்றி அவர் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

அவரது ஆராய்ச்சியின் பலனாக புற்றுநோய்க்கு காரணமான பல செல்களைப் பற்றி, பிந்தைய ஆராய்ச்சியாளர்களால் அறிந்து கொள்ள முடிந்தது. இத்தாலியின் உயர்ந்த ஆராய்ச்சியாளராகவும், மதிப்பிற்குரிய நபராகவும் விளங்கிய அவர், அமெரிக்கரான ஸ்டான்லி கோஹன் என்பவருடன் இணைந்து நடத்திய ஆராய்ச்சிக்காக, இருவருக்கும் கடந்த 1986-ம் ஆண்டு உலகின் உயரிய விருதான நோபல் விருது வழங்கப்பட்டது.

100 வயதை கடந்த நிலையிலும், தொடர்ந்து ஆராய்ச்சி ஒன்றிலேயே தனது கவனத்தை செலுத்தி வந்த ரீட்டா லெவி மோன்டால்சினி, நேற்று மரணமடைந்தார். உணவுக்குப் பிறகு, உறங்கச் சென்ற அவரது உயிர் தூக்கத்திலேயே அமைதியாக பிரிந்தது என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

-DINAVIDIYAL!