HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Tuesday, 1 January 2013

ஆங்கிலப் புத்தாண்டு 2013 வருடம் இன்று பிறந்தது: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்கள் மகிழ்ச்சி கொண்டாட்டம்

ஆவலுடன் எதிர்பார்த்த ஆங்கிலப் புத்தாண்டான 2013-ஆம் வருடம் ஆண்டு இன்று பிறந்தது. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள மக்கள், இப்புத்தாண்டினை வானவேடிக்கையுடன் வரவேற்று கொண்டாடி வருகின்றனர். இப்புத்தாண்டின் முதல் நாளான ஜனவரி 1-ம் தேதி முதல், நாட்டில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் இந்நாளை வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.

சென்னை மெரினா கடற்கரையோரம் அமைந்துள்ள சாந்தோம் கிறிஸ்துவ தேவாலாயத்தில் கிறிஸ்துவர்கள் ஒன்று கூடி இப்புது வருடப்பிறப்பை வரவேற்று சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மெரினா கடற்கரையில் கூடியுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் இப்புத்தாண்டை வரவேற்று கொண்டாடி வருகின்றனர். சென்னையிலுள்ள முக்கிய கோவில்களிலும் இப்புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதுபோன்று புதுச்சேரியிலும் பொதுமக்கள் இப்புத்தாண்டை வரவேற்று கொண்டாடி வருகின்றனர். சென்னையில் மெரினா கடற்கரை, எலியட் கடற்கரை மற்றும் மாமல்லபுரம் கடற்கரையில் நடைபெறும் கொண்டாட்டத்திலும், கேளிக்கை அரங்குகளில் நடைபெறும் கொண்டாட்டங்களின் போதும் எந்தவித அசம்பாவித சம்பவமும் நடக்கா வண்ணம் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

-DINAVIDIYAL!