HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Monday, 31 December 2012

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்க சட்டத்திருத்தம்: கருத்து தெரிவிக்க அனைத்துக் கட்சிகளுக்கு ஷிண்டே அழைப்பு

டெல்லியில் கடந்த 16-ம் தேதி மருத்துவ மாணவி ஒருவர், 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்தார். இதையடுத்து டெல்லியில் நடத்தப்பட்ட தொடர் போராட்டங்களில், பெண்களுக்கு எதிரான குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதன் அவசியத்தை உணர்ந்த மத்திய அரசு, சட்டத்திருத்தம் தயாரிப்பதற்காக ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி வெர்மா தலைமையிலான குழுவை அமைத்தது. இக்குழு ஒரு மாதத்தில் தனது அறிக்கையை அளிக்க உள்ளது.

பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்களுக்கு கடுமையாக தண்டனை வழங்குவதற்கு, சட்டத்தில் என்ன திருத்தங்கள் செய்யலாம் என்பது குறித்து அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் மத்திய உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என்றும், பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை நடத்தி விவாதிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இக்கோரிக்கையை மீண்டும் இன்று சுஷ்மா வலியுறுத்தினார்.

எனவே, சட்டத்திருத்தம் தொடர்பாக வெர்மா குழு அறிக்கை அளித்த பின்னர், அனைத்துக் கட்சிகளை அழைத்து அரசு ஆலோசனை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.-DINAVIDIYAL!