HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Monday, 31 December 2012

வேளாங்கண்ணி கடலில் மூழ்கி 3 பேர் பலி: புத்தாண்டு கொண்டாட வந்தவர்களின் சோகம்

ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம் இன்று மாலை முதலே களைகட்டத் தொடங்கியது. சுற்றுலாத் தலங்களில் புத்தாண்டு கொண்டாடுவதற்காக ஏராளமானோர் குவிந்துள்ளனர். இவ்வாறு வேளாங்கண்ணியில் இன்று திரண்டிருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினருடன் அங்குள்ள கடலில் குளித்து மகிழ்ந்தனர். அப்போது ராட்சத அலை அடித்ததால் பலர் பதட்டத்துடன் வெளியேறினர்.

அப்போது கோவையைச் சேர்ந்த முருகன், சத்யா மற்றும் கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயலைச் சேர்ந்த யமுனா ஆகியோர் ராட்சத அலையில் சிக்கி இறந்தனர். சந்தீப் என்ற சிறுவனையும் காணவில்லை. அவனும் அலையில் அடித்துச் சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. அவனைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
-DINAVIDIYAL!