HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Sunday, 30 December 2012

அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு தொடக்கம்

காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி தாவரவியல் துறை சார்பில் பசுமை உயிரிய சக்தி என்ற தலைப்பிலான கருத்தரங்கு அழகப்பா பல்கலைக்கழக கல்வியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதாக கல்லூரி முதல்வர் (பொறுப்பு) இ. குமாரசுவாமி தெரிவித்தார்.
 இதுகுறித்து அவர் கூறியது: சென்னை பல்கலைக்கழக தாவரவியல் முற்போக்கு ஆய்வு மைய இயக்குநரும், பாசி உயிரிய எரிசக்தி வல்லுநருமான பேராசிரியர் ரா. ரெங்கசாமி இக்கருத்தரங்கிற்கு தலைமை வகிக்கிறார்.
 மதுரை தியாகராஜர் கல்லூரி தாவரவியல் பேராசிரியை எய்னி, பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழக பசுமை சக்தி மைய வல்லுநர் பெ. திலகன் மற்றும் பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளிலிருந்து ஆய்வாளர்கள் உயிரிய எரிசக்தியின் தற்போதைய அவசியம் குறித்துப் பேசுகின்றனர்.
 வெள்ளிக்கிழமை மாலை நடைபெறும் நிறைவு விழாவில், அழகப்பா பல்கலைக்கழக உயிரித் தொழில்நுட்பவியல் துறைத் தலைவர் ச. கருத்தபாண்டியன் கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கி நிறைவுரையாற்றுகிறார். 
 இக்கருத்தரங்குக்கு 40 ஆய்வுக் கட்டுரைகள் பெறப்பட்டுள்ளன. இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
 கருத்தரங்கு செயலரும், கல்லூரியின் தாவரவியல் துறைத் தலைவருமான கு. அருண்குமார், கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர் சி. போத்திராஜ், தாவரவியல் துறை ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர் என்றார்.

-DINAVIDIYAL!