HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Monday, 31 December 2012

ஆந்திரா தொழிலதிபர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் வழிப்பறி கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

12 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுக்குச் சென்ற வெங்கட்ரெட்டி அங்கு சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்தார். அவரது மனைவி கவிதா சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். 

இந்நிலையில் வெங்கட்ரெட்டி சனிக்கிழமை இரவில் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனில் மனைவி கவிதா தொடர்புகொண்டபோது போனை எடுக்கவில்லை. பின்னர் அவர் சூப்பர் மார்க்கெட் சென்றபோது அங்கு வெங்கட்ரெட்டி ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார்.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். கொள்ளையர்கள் அவரைச் சுட்டுக் கொன்றுவிட்டு பணத்தை திருடிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

வெங்கட்ரெட்டி இறந்தது பற்றி ஐதராபாத் அருகே உள்ள கரீம் நகரில் உள்ள அவரது சகோதரியின் வீட்டிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மைத்துனர் ஷியாம் சுந்தர் ரெட்டி, உடலைப் பெறுவதற்காக அமெரிக்கா செல்ல உள்ளார்.
-DINAVIDIYAL!