இதுதொடர்பாக அரசுத்தேர்வுகள் இயக்கத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:-
2013-ம் ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் 1-ம் தேதி தொடங்கி மார்ச் 27 வரை நடைபெறுகிறது. பிளஸ் 2 செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2-வது வாரத்தில் தொடங்குகிறது. இதேபோல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 27ம் தேதி தொடங்கி ஏப்ரல் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.
பிளஸ் 2 பொதுத்தேர்வை சுமார் 8 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். பத்தாம் வகுப்பு தேர்வில் 10.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்கிறார்கள்.
பிளஸ் 2 அட்டவணை வருமாறு:-
மார்ச் 1 - மொழித்தாள் ஒன்று,
மார்ச் 4 - மொழித்தாள் இரண்டு,
மார்ச் 6 - ஆங்கிலம் முதல் தாள்,
மார்ச் 7 - ஆங்கிலம் இரண்டாம் தாள்,
மார்ச் 11 - இயற்பியல், பொருளியல்
மார்ச் 14 - கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல
மார்ச் 15 - வணிகவியல், வீட்டு அறிவியல்
மார்ச் 16 - வேதியியல், கணக்கியல்
மார்ச் 21 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்.
பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை வருமாறு:-
மார்ச் 27 - மொழித்தாள் ஒன்று
மார்ச் 28 - மொழித்தாள் இரண்டு
ஏப்ரல் 1 - ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல் 2 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 5 - கணிதம்
ஏப்ரல் 8 - அறிவியல்
ஏப்ரல் 12 - சமூக அறிவியல்
இவ்வாறு இயக்குனர் வசுந்தராதேவி அறிவித்துள்ளார். -DINAVIDIYAL!