ஆயுதக் கொள்வனவு சதிமுயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு இலங்கையர்கள் கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், இலங்கை இராணுவத்திற்கு எதிராகப் பயன்படுத்துவதற்காக யுத்தக் கப்பல்களுக்கான மென்பொருட்களை கொள்வனவு செய்வதற்கும் அவர்கள் முயற்சித்திருந்ததாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதீபன் நடராஜா (36 வயது) , சுரேஷ் ஸ்ரீஸ்கந்தராஜா (32 வயது) ஆகிய இருவரும் நேற்று முன்தினம் வியாழக்கிழமை புரூக்ளினிலுள்ள சமஷ்டி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது தம்மீதான குற்றச்சாட்டுக்களை அவர்கள் மறுத்திருந்தனர்.
புலிகளுக்கு ஆதரவளிப்பதற்கான சதி முயற்சியில் ஈடுபட்டதாக 2006 இல் அமெரிக்கா இவர்கள் இருவருக்கும் எதிராக முதலில் குற்றச்சாட்டுத் தெரிவித்திருந்தது. அச்சமயம் தொடக்கம் நாடுகடத்தலுக்கு எதிராக இருவரும் போராடி வந்தனர்.
ஆயினும் அமெரிக்காவுக்கு நாடு கடத்த வேண்டாமென்ற அவர்களின் கோரிக்கையை கனடிய உயர் நீதிமன்றம் இம்மாத முற்பகுதியில் நிராகரித்திருந்தது. இவர்கள் இருவரினதும் பிணை மனுக்கள் ஜனவரி 8 இல் அமெரிக்க சமஷ்டி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளன.பில்லியன் டொலர் பெறுமதியான விமான எதிர்ப்பு ஏவுகணைகள், ஏவுகணை லோஞ்சர்கள் ஏனைய இராணுவத் தளவாடங்களைப் பெற்றுக் கொள்வதற்கான சதி முயற்சியில் ஈடுபட்டதாகவும், புலிகளுக்கு பொருள் உதவி வழங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதாகவும் நடராஜாவுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பயங்கரவாதக் குழுவுக்கான சொத்துகளை கையாண்டதாக ஸ்ரீஸ்கந்தராஜா மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.அமெரிக்க அரசின் கோரிக்கையின் பேரில் கனடாவில் கைதான இருவரும் இந்த வாரம் நாடு கடத்தப்பட்டிருந்தனர்.இருவரும் குற்றவாளிகளென நிரூபிக்கப்பட்டால் ஆகக் குறைந்தது 25 வருடங்கள் சிறைத் தண்டனையையும் ஆகக் கூடியதாக ஆயுள் தண்டனையையும் நடராஜா அனுபவிக்க நேரிடும் ஸ்ரீஸ்கந்தராஜா ஆகக் கூடியதாக 25 வருட சிறைத்தண்டனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
-DINAVIDIYAL!