HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Tuesday, 1 January 2013

துரை தயாநிதியி: விசாரணை

சென்னை: கிரனைட் முறைகேடு வழக்கு தொடர்பாக மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியிடம் மதுரை ஊரக மாவட்ட தனிப் படைப் பொலிஸார் வியாழக்கிழமை விசாரணை நடத்தினர் 
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் கிரனைட் குவாரிகளில் நடந்த முறைகேடு தொடர்பாக ஊரக பொலிஸார் ஏராளமான வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
இதில் கடந்த 2010 ஆம் ஆண்டு வரை ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனத்தில் பங்குதாரராக இருந்த துரை தயாநிதி மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது
துரை தயாநிதிக்கு மேலூர் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்த நிலையில் அவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நிபந்தனைப் பிணை பெற்றார்.
இந்த நிலையில் அவரிடம் விசாரணைக்கு ஆஜராகுமாறு கிரனைட் வழக்குகளை விசாரிக்கும் தனிப்படையினர் சமன் அளித்தனர். இதை ஏற்றுக் கொண்ட துரை தயாநிதி வழக்குரைஞர்களுடன் மதுரை ஊரக காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை வந்தார்.
முன்னதாக அவர் காலையில் கீழ்வளவு காவல் நிலையத்துக்குச் சென்று கையெழுத்திட்டார். அப்போது அவருடன் தி.மு.க. வழக்குரைஞர்கள், தி.மு.க. பிரமுகர்கள் சென்றனர். அங்கிருந்து அவர் காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திக்கு வந்தார்.
காவல் துறை கண்காணிப்பாளர் வே.பாலகிருஷ்ணன் ஆலோசனையின் அடிப்படையில் துரை தயாநிதியிடம் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், துணை கண்காணிப்பாளர் தங்கவேல் ஆகியோர் ஏற்கனவே எழுதிவைத்த கேள்விகள் அடிப்படையில் பதிலைப் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தொழில் வருவாய் தொழில் பங்குதாரர்கள் நண்பர்கள், உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து துரை தயாநிதியிடம் பொலிஸார் கேள்விகளைக் கேட்டு பதில் பெற்றுள்ளனர். அப்போது சில கேள்விகளுக்கு துரை தயாநிதி தனது அருகில் இருந்த வழக்குரைஞரிடம் ஆலோசித்து பதில் அளித்தாராம்.
-DINAVIDIYAL!