நேர்வேயின் சிறுவர் காப்பகங்களில் சிக்கியுள்ள சுமார் 12ஆயிரம் சிறுவர்களுக்கும் அந்த சிறுவர்களை இழந்து பரிதவித்து நிற்கின்ற பெற்றோர்களுக்கும் (2013) இவ்வாண்டிலாவது விடுதலை கிடைக்குமா என்ற ஏக்கமும் எதிர்பார்ப்பும் நோர்வேயிலிருந்து வெளியாகியுள்ளன.
சிறுவர் விவகாரங்களில் பாரிய தவறுகள் இழைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சர்வதேச மனித உரிமைகள் பேரவை நோர்வே அரசாங்கத்தை கடுமையாக சாடியிருக்கின்ற இக்கால கட்டத்தில் நோர்வேயின் அரசமட்டத்து நிறுவனங்கள் அல்லது இலாகாக்கள் மற்றும் நிறுவனங்களை அல்லது மாற்று இலாகாக்களை குற்றம் சாட்டிக்கொண்டிருக்கின்ற செயற்பாடுகள் இடம்பெறுகின்றனவே தவிர ஆக்கபூர்வ செயற்பாடுகள் எதுவும் இதுவரையில் இடம்பெறவில்லையென நோர்வேயின் சிறுவர் காப்பகங்களால் பாதிக்கப்பட்டுள்ள பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
நோர்வே அரசு,நோர்வே நீதிமன்றங்கள், நோர்வே பாதுகாப்புத் தரப்பு, நோர்வே சிறுவர்காப்பகங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் விடுகின்ற தவறுகளிகன் காரணமாக அப்பாவிச் சிறுவர்களும் அவர்களது பெற்றோர்களும் பலிக்கடாக்களும் ஆக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர்.
சிறுவர் காப்பகங்களால் கவரப்பட்டுள்ள சிறுவர்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றனர் என்றும் அவர்களதும் அவர்களது பெற்றோரினதும் அடிப்படை மற்றும் மனிதநேய உரிமைகள் பாதுனகாக்கப்படுவதை நோர்வே அரசு தவறு இழைத்திருப்பதாக சர்வதேச மனித உரிமைகள் பேரவையால் சுட்டிக்காட்டப்பட்டு அறிவுறுத்தியிருக்கின்ற நிலையிலும் நோர்வே அரசாங்கமானது அதனை தொடர்ச்சியாக அலட்சியப்படுத்திவருவதாகவே பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்தே தெரிவிக்கப்டுகின்றது.
மேலும் தமது குழந்தைகளை தம்மிடத்திலிருந்து வருடக்கணக்காக பிரித்து வைத்துள்ள நோர்வே அரசாங்கம் குழந்தைகளை அவர்களது பெற்றோரிடத்தில் மீணடும் ஒப்படைக்க வேண்டும் என்ற நோக்கத்தை முற்றாக மறந்து விட்டதாகவும் கவலை வெளியிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு சிறுவர்களை சிறைப்பிடித்து வைத்துள்ள நோர்வேயின் சிறுவர்காப்பகங்கள் குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இடையிலான உறவினை பலவந்தமாக பறித்தெடுக்கும் நோக்கில் செயற்பட்டு வருகின்றமையை உலகநாடுகள் கண்டிக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
சிறுவர் காப்பகங்கள் தவறிழைத்திருப்பதாகவும் மனோவியல் அதிகாரிகளால் நீதிமன்றங்களுக்கு முறையான தகவல்கள் பெற்றுக்கொடுக்கப்படவில்லை என்றும் நோர்வேயின் பல்வேறு ஊடகங்களில் தகவல்களை வெளியிடுவதானது தமது அரசியல் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளும் செயற்பாடாக அமைந்திருக்கும் அதேவேளை , இது உலக நாடுகளையும் சர்வதேச மனித உரிமைகள் பேரவையையும் ஏமாற்றும் செயற்பாடாக இருப்பதாகவும் நோர்வேயின் சிறுவர்காப்பகங்களால் பாதிக்கப்பட்ட பெற்றோர் கூறியுள்ளனர்.
-DINAVIDIYAL!