புதுடில்லி: பெண்கள் செக்ஸ் கொடுமைக்கு ஆளாகும் போது அவசர உதவிக்கென அரசு சார்பில் அவசர தொலைபேசி எண் 181 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண் முதல்நாளிலேய செயல்படாமல் போனது. அழைத்தால் வெறும் பீப் சப்தம் மட்டுமே வந்தது இதனால் மக்கள் அரசு மீது கடும் அதிருப்தியை தெரிவித்தனர்.
கடந்த 16ம் தேதி மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கடும் நடவடிக்கைகள் வேண்டும் என மாணவ, மாணவிகள் நடத்திய போராட்டத்தியதால் டில்லி ஸ்தம்பித்தது. இதனையடுத்து மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
டில்லியில் முதல்வர் ஷீலா தீட்ஷீத் அவசர எண் 181 என்ற பொது அழைப்பை உருவாக்கியுள்ளார். இந்த தொலைபேசிக்கு அழைத்தவுடன் சிறப்பு வாகனம் மூலம் பாதுகாப்பிற்கும், சங்கடத்தில் சிக்கிய பெண்ணை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.துவக்க நாளை முன்னிட்டு இன்று டில்லி நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்பட்டது. ஆனால் இந்த எண் இன்று முதல் நாளில் செயல்படாமல் போனது. வெறும் பீப் சப்தம் மட்டுமே வந்தது.
இது தொடர்பாக டில்லி அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில்; மத்திய அரசு முதலில் 167 என்ற எண்ணை தந்தது. இது எளிதாக நினைவில் கொள்ள முடியாது என்று 181 என்ற எண் கேட்கப்பட்டு பெறப்பட்டது. இன்று நெட்வொர்க் டெக்னிக்கல் பிரச்னை காரணமாக செயல்படவில்லை. விரைவில் சரி செய்யப்பட்டு விடும். முதல்வர் அலுவலக செயலக அதிகாரிகள் கண்காணிப்பில் இந்த அமைப்பு செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.
-DINAVIDIYAL!