HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Tuesday, 1 January 2013

இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் கூட்டு புத்தாண்டு கொண்டாட்டம் ரத்தானது!

கொல்கத்தா: இந்தியா வருகை தந்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து இந்திய வீரர்கள் புத்தாண்டு கொண்டாடும் முடிவு தற்போது ரத்து செய்யப்பட்டிருக்கிறது. கொல்கத்தாவில் வரும் 3-ந் தேதி 2-வது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இதையொட்டு இரு அணி வீரர்களும் கொல்கத்தாவில் இணைந்து புத்தாண்டை கொண்டாட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்திய அணி வீரர்கள், புத்தாண்டு நாளில் தங்களது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட விரும்பியதால் தற்போது இந்த கூட்டு கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதனிடையே கொல்கத்தா கிரிக்கெட் போட்டியைக் காண பிரதமர் மன்மோகன்சிங் திட்டமிட்டிருந்ததாகவும் பாலியல் பலாத்கார சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து இதுவும் ரத்து செய்யப்பட்டிருக்கிறதாகவும் கூறப்படுகிறது. ஜனவரி 3-ந் தேதியன்று கொல்கத்தாவில் இந்திய அறிவியல் காங்கிரஸின் நூற்றாண்டு விழா நிகழ்சியில் பிரதமர் கலந்து கொண்டு பின்னர் போட்டியை காண திட்டமிட்டிருந்தார். தற்போது போட்டியை காண செல்வது ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இருப்பினும் கபில்தேவ், திலீப் வெங்சர்க்கார் உள்ளிட்ட முன்னாள் வீரர்களை கொல்கத்தாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக கொல்கத்தா கிரிக்கெட் வாரியம் அழைத்திருக்கிறது.

-DINAVIDIYAL!