அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஹிலாரி கிளிண்டன் சில வாரங்களுக்கு முன்பு வயிற்றில் தொற்றுக் கிருமி ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டார். இந்நிலையில் நேற்று அவருக்கு மீண்டும் உடல்நலன் பரிசோதிக்கப்பட்டது. அப்போது அவரது உடலில் ரத்தம் கட்டி இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர் நியூயார்க் நகரில் பிரெஸ்பைட்டேரியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மூளை அல்லது நுரையீரலில் இந்த ரத்தக் கட்டி ஏற்பட்டிருந்தால் அது மிகவும் அபாயகரமானது எனக் கூறப்படுகிறது. மருத்துவர்கள் தொடர்ந்து ஹிலாரியின் உடல் நிலையை கண்காணித்து வருகின்றனர்.
-DINAVIDIYAL!
-DINAVIDIYAL!