நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கையெழுத்திட்ட பைபிள் புத்தகம், ரூ. 4.07 கோடிக்கு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏலம் போனது.
ஜெர்மன் மொழியில் அச்சிடப்பட்டுள்ள இப்புத்தகத்தில் ஐன்ஸ்டீன் மற்றும் அவரது மனைவி எல்ஸா ஆகியோர் 1932-ம் ஆண்டு கையெழுத்திட்டு அமெரிக்க நண்பரான ஹரியிட் ஹாமில்டனுக்கு அன்பளிப்பாக ஐன்ஸ்டீன் வழங்கினார்.
"மனிதனின் ஞானத்தைத் தூண்டுவதற்கும், மனதை ஆறுதல் படுத்துவதற்குமான ஆற்றல் பைபிள் புத்தகத்தில் உள்ளது.
அதனால் அதனை அன்றாடும் படிக்க வேண்டும்' என்று ஐன்ஸ்டீன் அப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.-DINAVIDIYAL!