புதுடில்லி: எஸ்.எம்.எஸ்., மூலம், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி, துவக்கி வைக்கப்பட்டு உள்ளது. ரயில்வே முன்பதிவு மையங்கள், ஆன்-லைன், ரயில்வே ஏஜன்சிகள், ஐ.ஆர்.சி.டி.சி., ஆகியவை மூலம், ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. இதில், ஆன்-லைன் டிக்கெட் புக்கிங் செய்ய, இணையதளம் வசதி, ஸ்மார்ட் போன் இருந்தால் தான் பெற முடியும். இப்போது, மொபைல் போன்களை இந்தியா முழுவதும், 80 சதவீத மக்கள் பயன்படுத்துகின்றனர். இதில், ஸ்மார்ட் போன்கள் வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை குறைவு தான். சாதாரண மக்களும், ஆன்-லைனில் புக்கிங் செய்யும் வகையில், மொபைல் போனில் இருந்து, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை, ரயில்வே துவக்கி வைத்துள்ளது. எஸ்.எம்.எஸ்., டிக்கெட் முன்பதிவு சேவையை இன்று, மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகா கார்ஜூன கார்கே துவக்கி வைத்தார்.
-DINAVIDIYAL!
-DINAVIDIYAL!