HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Saturday, 29 June 2013

மதுரை கலெக்டர் உள்பட ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை: மதுரை மாவட்ட கலெக்டர் உள்பட பல்வேறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக இன்று தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, இதில் திருவண்ணாமலை கலெக்டர் பிங்கலே விஜய் , சென்னை மாநகராட்சி துணை கமிஷனராகவும், மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, இடமாற்றம் செய்யப்பட்டு வணிகவரித்துறை இணை செயலராகவும், எல். சுப்ரமணியன் , மதுரை மாவட்ட கலெக்டராகவும், கே.விவேகானந்தன் , தர்மபுரி மாவட்ட கலெக்டராகவும், ஞானசேகரன் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராகவும், தர்மபுரி கலெக்டராக இருந்த லில்லி, வணிகத்துறை இணை கமிஷனராகவும், டி.உதயச்சந்திரன், நிதித்துறை செயலராகவும், (செலவினம் ), ஹர்மந்தர்சிங், காதி மற்றும் கைவினைத்துறை முதன்மை செயலராகவும், நியமிக்கப்பட்டுள்ளனர். ஆர்.ஆர்., சம்பத் அருங்காட்சியக செயலராகவும், நியமிக்கப்படுகின்றனர். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ள


-DINAVIDIYAL!