அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
பேரறிஞர் அண்ணாவின் 105–ஆவது பிறந்த நாளான 15–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணி அளவில், சென்னை அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முதல்–அமைச்சர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தி, பிறந்த நாள்
விழா சிறப்பு மலரை வெளியிட உள்ளார்.
நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்வார்கள்.
-DINAVIDIYAL!