தெண்டுல்கரின் 200–வது டெஸ்ட் போட்டியை நடத்துவதில் கடும் போட்டி நிலவுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி நவம்பர் மாதம் இந்தியா
வந்து 2 டெஸ்டில் விளையாடுகிறது. இதன் 2–வது போட்டி தெண்டுல்கருக்கு 200–வது டெஸ்ட் ஆகும். சுழற்சி முறைப்படி இந்த டெஸ்ட் போட்டிகள் பெங்களூர், அகமதாபாத்தில் நடைபெற வேண்டும்.
தெண்டுல்கரின் 200–வது டெஸ்டை நடத்த மும்பை, கொல்கத்தா, குஜராத் கிரிக்கெட் சங்சங்கள் விரும்புகின்றன. இது தொடர்பாக கிரிக்கெட் வாரியத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.
கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம் மட்டும் எந்த வேண்டுகோளையும் வைக்கவில்லை. மும்பை, கொல்கத்தா, அகமதாபாத் ஆகிய இடங்கள் போட்டியில் உள்ளன. கிரிக்கெட் வாரிய பொதுக்குழுவில் இதுகுறித்து முடிவு செய்யப்படும்.-DINAVIDIYAL!