HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Thursday, 5 September 2013

சிரியா மீது போர் தொடுக்க அமெரிக்க செனட் கமிட்டி ஒப்புதல்

வாஷிங்டன், செப் 5-

இரசாயன ஆயுதங்களால் சிரியா தாக்குதல் நடத்தியது என்ற குற்றச்சாட்டை அடுத்து சிரியா மீது போர் தொடுக்க அமெரிக்கா ஆயத்தமாகி வருகிறது. ஆகஸ்ட் 31-ம் தேதி கொண்டுவந்த இந்த தீர்மானத்திற்கு அமெரிக்க பாராளுமன்றத்தின் இரு சபைகளின் ஆதரவை பெற அதிபர் பராக் ஒபாமா ஆர்வம் காட்டிவருகிறார்.  

நேற்று ஒபாமா ரஷிய ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ள இரண்டுநாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு சிரியா மீது தாக்குதல் தொடுக்க உலக நாடுகளின் ஆதரவை அவர் திரட்டுவார் என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் நேற்று அமெரிக்க காங்கிரசின் முக்கிய சபையான செனட் சபை கமிட்டி சிரியா மீது போர் தொடுக்க ஒபாமாவிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஒபாமாவின் இந்த வேண்டுகோளுக்கு செனட் சபையின் வெளிநாடுகளுக்கான விவகார கமிட்டியில் உள்ள 10 வோட்டுகளில், ஆதரவாக 7 வோட்டுகள் கிடைத்துள்ளன. 

மேலும் சிரியாவின் மீது 60 நாட்களுக்குள் போரை முடிக்கவும், தரைப்படைகளை பயன்படுத்தக்கூடாது என்றும் அது அனுமதியளித்துள்ளது. இதனையடுத்து இந்த தீர்மானம் முக்கிய சபையான செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்படும். பின்னர் அடுத்த வாரம் அதன் மீதான வாக்கெடுப்பு நடக்கும்.

பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரா கமிட்டியில் விசாரணை நடந்துவரும் நிலையில் கீழ் சபையான பிரதிநிதிகள் சபையிலும் அந்த தீர்மானம் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. -DINAVIDIYAL!